கொரோனாவுக்கு எதிரான 'பூஸ்டர் டோஸ்' தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசம் -மத்திய அரசு

பூஸ்டர் டோஸ் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2022-07-13 11:05 GMT

புதுடெல்லி,

நாட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றை எதிர்கொள்ள கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் பெரிதும் உதவி வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரி 16ந்தேதி தொடங்கிய தடுப்பூசி திட்டம் பல்வேறு கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன் எச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது.

இந்த நிலையில் பூஸ்டர் டோஸ் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.தடுப்பூசி முகாம் ஜூலை 15ம் தேதி முதல் நடைபெறும்.நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி ஜூலை 15ம் தேதி முதல் செப். 28ம் தேதி வரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ்  இலவசம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்