சகோதரியை கேலி செய்ததாக சக மாணவரை கத்தியால் குத்திய 9-ம் வகுப்பு மாணவன் - ஆந்திராவில் பரபரப்பு சம்பவம்

ஆந்திராவில் பள்ளியில் மாணவரை சக மாணவனே கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;

Update:2023-04-20 20:22 IST

அமராவதி,

ஆந்திர பிரதேச மாநிலத்தின் காக்கிநாடா மாவட்டத்தை அடுத்த ராஜநகரம் பகுதியில் உள்ள ஜில்லா பரிஷத் உயர்நிலை பள்ளியில் மாணவரை சக மாணவனே கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளியில் ஒன்பதம் வகுப்பு பயின்று வரும் உதய் சங்கர் என்ற மாணவர், சக மாணவரான பின்கெ ஸ்ரீஹரி சாய்நாத்-ஐ கத்தியால் குத்தினார். இருவருடன், உதய் சங்கரின் ஒன்றுவிட்ட சகோதரியும் அதே வகுப்பில் பயின்று வருகிறார்.

இந்த நிலையில், உதய் சங்கரின் சகோதரியை ஸ்ரீஹரி கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக உதய் சங்கர் இவ்வாறு செய்திருக்கிறார். சம்பவம் நடைபெற்ற தினம், பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு தேர்வு நடைபெற்று வந்தது. தேர்வின் இடையில் திடீரென எழுந்து நின்ற உதய் சங்கர், தனது பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, பின்கெ ஸ்ரீஹரி சாய்நாத்-ஐ கத்தியை கொண்டு கடுமையாக குத்தினார். கத்தியால் குத்தியதோடு அவரை, உதய் சங்கர் கடுமையாக திட்டித் தீர்த்தார்.

கத்தி குத்து வாங்கிய ஸ்ரீஹரியை பள்ளியின் தலைமை ஆசிரியர் அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மருத்துவமனையில் ஸ்ரீஹரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து ராஜநகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் உதய் சங்கரை காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்