முன்னாள் பிரதமர் நேரு நினைவு தினம்: நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 60-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

Update: 2024-05-27 03:30 GMT

புதுடெல்லி,

இந்தியாவின் விடுதலைக்காக போராடிய சுதந்திர போராட்ட வீரர்களில் முக்கியமானவர் ஜவஹர்லால் நேரு. 1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவியேற்றார். 16 ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமராக இருந்த நேரு கடந்த 1964-ம் ஆண்டு மே 27-ம்தேதி மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்த நிலையில் இன்று ஜவஹர்லால் நேருவின் 60-வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவு தினத்தையொட்டி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி, ராஜ்யசபா எம்.பி. அஜய் மாக்கன் ஆகியோர் அவரது நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்