சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு கொரோனா

மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் (தலைமை வக்கீல்) துஷார் மேத்தாவுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது;

Update:2022-07-26 07:53 IST

Image Courtesy : PTI 

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. முக்கிய பிரமுகர்கள் பலர் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வீடு திரும்பி வருகிறார்கள்.

இந்தநிலையில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் (தலைமை வக்கீல்) துஷார் மேத்தாவுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கொரோனா தொற்று இருப்பது கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கண்டறியப்பட்டது. எனவே தனிமைப்படுத்திக்கொண்டேன். இதனால் வரலாற்று சிறப்புமிக்க புதிய ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க இயலவில்லை' என்று கூறியுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட போதும், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நடந்த சில வழக்குகளில் காணொலி காட்சி மூலம் அவர் ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்