மெஸ்ஸியை பார்க்கும் ஆவலில்... தேன் நிலவை ரத்து செய்து விட்டு வந்த புதுமண தம்பதி

முதலில், மெஸ்சியை பார்க்கவே நாங்கள் விரும்புகிறோம் என அந்த புதுமண தம்பதி கூறியது.;

Update:2025-12-13 09:18 IST

கொல்கத்தா,

உலகின் தலைச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான லயோனல் மெஸ்சி இன்று அதிகாலை இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். அர்ஜென்டினா அணியின் கேப்டனான அவர் 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்துள்ளார். இதனால், கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்து உள்ளனர்.

கொல்கத்தாவில் லேக் டவுன் பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டு கிளப் சார்பில் 70 அடி உயரத்தில் மெஸ்சியின் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. கையில் உலக கோப்பையை பிடித்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை மெஸ்சி காணொலி மூலம் திறந்து வைக்கிறார். மெஸ்சியின் வருகையையொட்டி அங்குள்ள 78 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட சால்ட்லேக் ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் ரூ.7 ஆயிரம் வரை விற்கப்படுகின்றன.

இதில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி, முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயஸ், நடிகர் ஷாருக்கான் உள்பட பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள். இந்நிலையில், மெஸ்சியின் தீவிர ரசிகர்கள் அவரை பார்க்க காலை முதல் ஆவலுடன் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளனர். அவரை பார்ப்பதற்காக வந்திருந்த புதுமண தம்பதி ஒன்று, செய்தியாளர்களிடம் கூறும்போது, சமீபத்தில் எங்களுக்கு திருமணம் நடந்தது.

ஆனால், மெஸ்சியின் வருகையை முன்னிட்டு நாங்கள் எங்களுடைய தேன் நிலவை ரத்து செய்து விட்டோம். முதலில், மெஸ்சியை பார்க்கவே நாங்கள் விரும்புகிறோம். அவரை பார்க்க ஆவலாக இருக்கிறோம். 10, 12 ஆண்டுகளாக நாங்கள் அவரை பின்தொடர்ந்து வருகிறோம் என கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்