பூட்டிய வீட்டுக்குள் தாய், 2 மகன்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு - டெல்லியில் பரபரப்பு

3 பேரும் தீவிர மனஉளைச்சலில் இருந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.;

Update:2025-12-12 21:27 IST

புதுடெல்லி,

சொத்துகளை பறிமுதல் செய்வது தொடர்பாக கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றுவதற்காக இன்று மதியம் 2.40 மணியளவில் கிழக்கு டெல்லியில் உள்ள ஒரு வீட்டிற்கு போலீசார் சென்றனர். அங்கு சென்று பார்த்தபோது அந்த வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

நீண்ட நேரமாக கதவை தட்டியும் யாரும் திறக்காததால், போலீசார் பூட்டை உடைத்து கதவை திறந்து உள்ளே சென்றனர். அங்கு அனுராதா கபூர்(வயது 52), அவரது மகன்கள் ஆஷீஷ் கபூர்(32) மற்றும் சைதன்யா கபூர்(27) ஆகிய மூவரும் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.

அங்கிருந்த ஒரு அறையில், கைப்பட எழுதப்பட்ட குறிப்பு ஒன்று கிடைத்துள்ளதாகவும், அதை வைத்து பார்க்கும்போது அந்த குடும்பத்தினர் தீவிர மனஉளைச்சலில் இருந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


Tags:    

மேலும் செய்திகள்