டெல்லி: 2 ஆண்டுகளுக்கு பிறகு மேம்பட்ட காற்றை சுவாசித்த மக்கள்

கடந்த 3 நாட்களாக டெல்லியில் பெய்த மழை காரணமாக அங்கு காற்று மாசு வெகுவாக குறைந்துள்ளது.

Update: 2022-10-10 17:08 GMT

Image Courtesy: PTI  

புதுடெல்லி,

டெல்லி அருகே உத்தர பிரதேசம், பஞ்சாப், அரியாணா ஆகிய மாநிலங்களில் உள்ள கிராமங்களில், அறுவடைக்குப் பிறகு வேளாண் கழிவுகளை விவசாயிகள் எரிப்பதால் ஏப்ரல், மே மற்றும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் டெல்லியில் காற்று மாசு அதிகரிக்கிறது. அதிக வாகன பயன்பாடு காரணமாகவும் டெல்லியில் காற்று மாசு நிலவி வருகிறது.

இதனால் அங்கு காற்றுத் தரக் குறியீடானது நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அவ்வப்போது அதிகமாவது வழக்கமான ஒன்றாகும். இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு சற்றே சுத்தமான காற்றை டெல்லி மக்கள் இன்று சுவாசித்து உள்ளனர்.

கடந்த 3 நாட்களாக டெல்லியில் பெய்த மழை காரணமாக அங்கு காற்று மாசு வெகுவாக குறைந்துள்ளது. அந்த வகையில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, டெல்லியில் கடந்த 24 மணி நேர சராசரி காற்றுத் தரக் குறியீடு (AQI) இன்று மாலை 4 மணிக்கு 44 ஆக இருந்துள்ளது.

இத்ற்கு முன் டெல்லியில் கடந்த ஆகஸ்ட் 31,2020 ஆம் ஆண்டு அன்று 24 மணி நேர சராசரி காற்றுத் தரக் குறியீடு 41ஐ பதிவு செய்து இருந்தது. அதன் பிறகு இன்றைய காற்றுத் தரக் குறியீடு ஆகஸ்ட் 31-யின் குறியீட்டை நெருங்கி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்