காளி பட சர்ச்சை : லீனா மணிமேகலைக்கு டெல்லி கோர்ட்டு சம்மன்

இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக கூறி லீனா மணிமேகலைக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது.

Update: 2022-07-11 12:41 GMT

Image Tweeted By @LeenaManimekali

புதுடெல்லி,

கவிஞரும், இயக்குநருமான லீனா மணிமேகலை காளி குறித்த ஆவணப் படத்தை தயாரித்துள்ளார்.இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அவர் சமீபத்தில் வெளியிட்ட்டார். அதில் காளி வேடம் அணிந்த ஒரு பெண் சிகரெட் புகைப்பது போன்றும், ஓரினச் சேர்க்கையாளர்களின் கொடியை வைத்திருப்பது போன்றும் சித்தரிக்கப்பட்டு இருந்தது.

இது இந்துக்கள் புனிதமாக வணங்கும் காளி தெய்வத்தை இழிவுப்படுத்துவதாக கூறி கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த போஸ்டர் குறித்து டுவிட்டரில் விளக்கமளித்த லீனா மணிமேகலை, ஒரு மாலைப்பொழுதில் கனடாவின் டொரோண்டோ நகரில் காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடக்கிற சம்பவங்கள் தான் காளி ஆவணப்படம் என தெரிவித்து இருந்தார்.

படத்தின் போஸ்டர் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாக மனுதாரர் தரப்பில் டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் திரைப்படத் தயாரிப்பாளர் லீனா மணிமேகலை உள்ளிட்டோர் ஆகஸ்ட் 6ம் தேதி நேரில் ஆஜராகும்படி டெல்லி கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது. 

இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக டெல்லியில் மட்டுமின்றி லீனா மணிமேகலை மீது இந்தியா முழுவதும் தற்போது பல புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்