குளத்தில் மூழ்கி மாணவன் சாவு

குளத்தில் மூழ்கி மாணவன் பலியானான்.

Update: 2022-11-07 18:45 GMT

பெங்களூரு: பெங்களூரு புறநகர் மாவட்டம் தாபஸ்பேட்டை அருகே சோம்புரா கிராமத்தை சேர்ந்த தம்பதியின் மகன் பவன் (வயது 15). இந்த சிறுவன் பள்ளி ஒன்றில் படித்து வந்தான்.நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் சோம்புரா கிராமத்தில் உள்ள குளத்திற்கு குளிப்பதற்காக சென்றான்.

குளத்தில் குளித்த போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால், குளத்து தண்ணீரில் மூழ்கி மாணவன் பவன் இறந்து விட்டான். தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்து பவனின் உடலை மீட்டார்கள். இதுகுறித்து தாபஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்