அயோத்தி ராமர் கோவிலில் ஆந்திர முதல்-மந்திரி சாமி தரிசனம்

அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு சந்திரபாபு நாயுடு சென்றார்.;

Update:2025-12-28 19:28 IST

லக்னோ,

ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு. இவர் இன்று உத்தரபிரதேசத்திற்கு சென்றார். உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் உள்ள விமான நிலையத்திற்கு சென்ற அவரை உ.பி. வேளாண் மந்திரி சூர்ய பிரதாப் வரவேற்றார்.

இதனை தொடர்ந்து அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு சந்திரபாபு நாயுடு சென்றார். ராமர் கோவிலில் சந்திரபாபு நாயுடு சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து, ராமர் கோவில் பகுதியை சுற்றிப்பார்த்த அவர் அங்கு நடைபெற்று வரும் கோவில் கட்டுமானப்பணிகளையும் பார்வையிட்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு, சிறப்பாக சாமி தரினம் செய்தேன். தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்த உத்தரபிரதேச அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்