"உயர்கல்வி மாணவர் சேர்க்கையை முன்கூட்டியே முடிக்க வேண்டாம்" - யூ.ஜி.சி. வேண்டுகோள்

சி.பி.எஸ்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பிறகு உயர்கல்வி மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் என யூ.ஜி.சி. கேட்டுக்கொண்டுள்ளது.

Update: 2022-07-13 19:45 GMT

புதுடெல்லி,

சி.பி.எஸ்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பாக உயர்கல்வி மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டாம் என உயர்கல்வி நிறுவனங்களிடம் பல்கலைக்கழக மானியக்குழு(யூ.ஜி.சி.) கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு யூ.ஜி.சி. சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில், சி.பி.எஸ்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக மேலும் ஒரு மாத காலம் தாமதம் ஏற்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே சி.பி.எஸ்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பிறகு உயர்கல்வி மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் எனவும், அதற்குள் மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதே நேரம் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், மாநில பாடத்திட்ட முறையில் நடந்த பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதால், உயர்கல்வி மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. சி.பி.எஸ்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தமிழகத்தில் உயர்கல்வி சேர்க்கைக்கு 5 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் என அமைச்சர் பொன்முடி ஏற்கனவே அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்