ஆந்திர ரயில் விபத்து: லோகோ பைலட்கள் கிரிக்கெட் பார்த்ததே காரணம்- திடுக் தகவல்

ஆந்திராவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற விபத்தில் 14 பயணிகள் உயிரிழந்தனர்.

Update: 2024-03-03 08:56 GMT

புதுடெல்லி,

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகபள்ளியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி ராயகடா பயணிகள் ரயில் விபத்துக்குள்ளானது. முன்னால் நின்று கொண்டிருந்த மற்றொரு ரயில் மீது மோதி இந்த விபத்து நேரிட்டது. இந்த கோர விபத்தில் பயணிகள் 14 பேர் பலியாகினர். 50-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இந்த விபத்துக்கு ரயிலின் லோகோ பைலட்கள் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்ததே காரணம் என்று ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இந்திய ரயில்வே மேற்கொண்டு வரும் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: ஆந்திர மாநிலத்தில் 2 ரயில்கள் மோதிய விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில் விபத்து ஏற்படுத்திய ஒரு ரயிலின் டிரைவர் மற்றும் உதவியாளர் இருவரும் கிரிக்கெட் போட்டியை செல்போனில் பார்த்து கொண்டிருந்தனர். இதனால் கவனச் சிதைவு ஏற்பட்டு விபத்து நடந்துள்ளது. இப்போது இதுபோன்ற கவனச்சிதறல்களைக் கண்டறிந்து, உறுதிசெய்யும் அமைப்புகளை நிறுவி வருகிறோம். ரெயிலை இயக்குவதில் முழு கவனம் செலுத்துகிறோம்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்