தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைமை செயல் அதிகாரி அதிரடி கைது

தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைமை செயல் அதிகாரியை அமலாக்கத்துறை நேற்று கைது செய்தது.

Update: 2022-09-06 20:20 GMT

புதுடெல்லி,

தேசிய பங்குச்சந்தையின் தலைமை செயல் அதிகாரியாக 1994 முதல் 2013-வரை செயல்பட்டவர் ரவி நரைன். அதன் பின்னர் தேசிய பங்குச்சந்தை நிர்வாக குழுவின் துணை தலைவராக 2017 வரை செயல்பட்டார். அதனை தொடர்ந்து தனது பதவியை ரவி நரைன் ராஜினாமா செய்தார்.

இதனிடையே, தேசிய பங்குச்சந்தை வர்த்தகத்தில் பண மோசடி முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, இந்த விவகாரத்தில் 2013 முதல் 2016 வரை தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைமை செயல் அதிகாரியான சித்ரா ராமகிருஷ்ணனை அமலாக்கத்துறையினர் ஏற்கனவே கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், தேசிய பங்குச்சந்தை வர்த்தகத்தில் பண மோசடி முறைகேடு தொடர்பாக முன்னாள் தலைமை செயல் அதிகாரியான ரவி நரைனை அமலாக்கத்துறையினர் நேற்று இரவு அதிரடியாக கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்