2000ம் ஆண்டு முதல் நாடாளுமன்ற எம்.பி.! 22 ஆண்டுகளுக்கு பின் டெல்லி பங்களாவை காலி செய்த முன்னாள் மந்திரி

மக்களைவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வந்த அவர், இந்த முறை ராஜ்ய சபா சீட் வழங்காததால் ஏமாற்றம் அடைந்தார்.

Update: 2022-05-31 15:17 GMT

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் மறைந்த அடல் பிஹாரி வாஜ்பாய் அரசாங்கத்தில் சிவில் விமானப் போக்குவரத்து மந்திரியாக பொறுப்பேற்றதிலிருந்து, முன்னாள் மந்திரி சரத் யாதவ், 2000ம் ஆண்டு முதல் புதுடெல்லியில் உள்ள 'எண்-7, துக்ளக் சாலை, பங்களாவில்' வசித்து வந்தார்.

தொடர்ந்து அவர், மக்களைவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினராக கடந்த பல ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில், ராஷ்திரிய ஜனதா தளம் கட்சி அவருக்கு இந்த முறை ராஜ்ய சபா சீட் வழங்காததால், அவர் ஏமாற்றம் அடைந்தார்.

இதன் காரணமாக அவர் எம்.பி. பதவிக்கு போட்டியிட முடியாத நிலை உருவாகியுள்ளது. அவருடைய நாடாளுமன்ற எம்.பி. வாழ்க்கைக்கு டிசம்பர் 2017ல் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை 4 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் அரசு பங்களாவை காலி செய்யாமல் வசித்து வந்தார். இதனையடுத்து கோர்ட்டு விடுத்த கெடு முடிவடைவதையொட்டி, இன்று அவர் காலி செய்தார்.

1974-ல் டெல்லிக்கு வந்த அவர், எமர்ஜென்சி காலத்தில் இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார். தொடர்ந்து பல தேர்தல்களை சந்தித்து வெற்றி பெற்றவர். சமீபத்தில் தான், அவர் பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவின் ராஷ்திரிய ஜனதா தளம் கட்சியுடன் தன்னுடைய லோக்தந்திரிக் ஜனதா தளத்தை இணைத்து கொள்வதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்