சிறுமி பலாத்கார வழக்கில் வியாபாரிக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை

சிறுமியை பலாத்காரம் செய்த வியாபாரிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து கோலார் கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2022-08-25 14:56 GMT

கோலார் தங்கவயல்;

சிறுமி பலாத்காரம்

கோலார் நகர் ஷாஹித் நகரை சேர்ந்தவர் முனாவர் உருப் முன்னா. வியாபாரியான இவர், கடந்த 2020-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கோலார் நகரில் உள்ள மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் மகளிர் போலீசார் முனாவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தினர்.

20 ஆண்டு கடுங்காவல் சிறை

இந்த வழக்கு விசாரணை கோலார் கோர்ட்டில் நடந்து வந்தது.இந்த நிலையில் வழக்கில் இறுதி விசாரணை நடத்தி நீதிபதி தீர்ப்பு கூறினார்.அதில், முனாவர் உருப் முன்னா, சிறுமியை பலாத்காரம் செய்தது நிரூபணமானதால் அவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

மேலும் அபராத தொகையை கட்ட தவறினால் கூடுதலாக மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்கவேண்டும் என்றும் தனது தீர்ப்பில் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்