திருமணத்திற்கு பிறகும் பழக்கம்.. மறக்க முடியவில்லை என.. லாட்ஜில் ரூம் போட்ட காதல் ஜோடி

காதலனுக்கு 28 வயது என்றும் இளம்பெண்ணிற்கு 31 வயது என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.;

Update:2026-01-08 19:24 IST

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ளது விதுரா கிராமம். இயற்கை - அழகு மற்றும் இதமான தட்பவெப்பநிலையை கு கொண்ட இந்த கிராமம் சிறந்த சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்குள்ள விடுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாலிபர் - மற்றும் இளம்பெண் ஆகிய இருவரும் அறை எடுத்து தங்கினர். இந்தநிலையில் அவர்கள் - தங்கியிருந்த அறை திறக்கப் - படாமலேயே இருந்தது. இதனால் சந்தேகமடைந்து அறைக்கதவை உடைத்து பார்த்தபோது இருவரும் பிணமாக கிடந்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து இருவரின் உடல்க ளையும் கைப்பற்றி விசா ரணை நடத்தினர்.

அதில் ' இறந்து கிடந்த வாலிபர் மறைமுட்டம் பகுதியை சேர்ந்த சுபின் (வயது28). இளம்பெண் ஆரியங்கோடு பகுதியை - சேர்ந்த மஞ்சு(31) என்பதும் தெரியவந்தது. இருவரும் காதலர்கள் என்பதும், வெவ்வேறு நபர்களை திருமணம் செய்த பிறகும் தொடர்ந்து பழகி வந்ததும் தெரியவந்தது. மறக்கமுடியாமல் இருவரும் அவ்வபோது தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். இவர்களது தொடர்பு குடும்பத்தினருக்கு தெரிந்து விட்டதால் வீட்டை விட்டு இருவரும் வெளியேறியிருக்கின்றனர். அவர்கள் மாயமானது குறித்து இருவரின் குடும்பத்தினரும் போலீஸ் நிலையங்களில் புகார் அளித்திருக்கின்றனர். அதன்பேரில் மறைமுட்டம் மற்றும் ஆரியன்கோடு போலீசார் வழக்குப்பதிந்து இருவரையும் தேடி வந்திருக்கின்றனர்.

இந்த நிலையில் அவர்கள் இருவரும் லாட்ஜில் பிணமாக கிடந்தனர். தங்களின் காதல் விவகாரம் குடும்பத்தினருக்கு தெரிய வந்ததால், வீட்டை விட்டு வெளியேறி இருவரும் தற்கொலை செய்திருப் பது போலீசாரின் முதற் கட்டவிசாரணையில் தெரிய வந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்