எமர்ஜென்சி லைட் பேட்டரியில் மறைத்து ரூ.67 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல் - ஐதராபாத் விமான நிலையத்தில் பறிமுதல்

பயணி கொண்டு வந்த எமர்ஜென்சி லைட் பேட்டரியில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.;

Update:2023-05-14 15:30 IST

ஐதராபாத்,

ஐதராபாத் சர்வதேச விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ரியாத்தில் இருந்து பஹ்ரைன் வழியாக ஐதராபாத் வந்திறங்கிய பயணியின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இந்த சோதனையின் போது அந்த பயணி கொண்டு வந்த எமர்ஜென்சி லைட் பேட்டரியில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 1,287.6 கிராம் எடை கொண்ட 14 தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் 67 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் என்று கூறப்படுகிறது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்