ராஜபக்சே சகோதரர்களின் வெளிநாட்டு பயண செலவு ரூ.4.30 கோடி - இலங்கை அதிபர் அலுவலகம் தகவல்

ஓராண்டில் மட்டும் ராஜபக்சே சகோதரர்களின் வெளிநாட்டு பயண செலவு ரூ.4.30 கோடி என்று இலங்கை அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Update: 2022-11-30 20:40 GMT

கொழும்பு,

இலங்கையில் நீடித்த கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் புரட்சி வெடித்ததை தொடர்ந்து, அங்கு ஆட்சியில் இருந்த ராஜபக்சே சகோதரர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் பதவி விலகினர். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே ஜூலையிலும், பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே மே மாதமும் ராஜினாமா செய்தனர். இவர்கள் இருவரும் ஆட்சியில் இருந்தபோது முந்தைய ஓராண்டில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணத்துக்கான செலவினங்களை அதிபர் மற்றும் பிரதமர் அலுவலகங்கள் தற்போது வெளியிட்டு உள்ளன. அதாவது இருவரின் வெளிநாட்டு பயண செலவு ரூ.4.30 கோடி என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதில் வங்காளதேசம், இத்தாலிக்கு பிரதமர் மகிந்த ராஜபக்சே மேற்கொண்ட பயணத்துக்கு ரூ.3.6 கோடி செலவாகி இருக்கிறது. இதைப்போல நியூயார்க், கிளாஸ்கோ, ஐக்கிய அரபு அமீரக பயணத்துக்காக அதிபர் கோத்தபய ராஜபக்சே ரூ.70 லட்சம் செலவிட்டு உள்ளார். நாடு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியபோது ராஜபக்சே சகோதரர்கள் வெளிநாட்டு பயணங்களுக்காக இவ்வளவு பெரிய தொகை செலவிடப்பட்டு இருப்பது இலங்கை மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்