காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்...!

வாரணாசியில் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சியை நாளை மறுநாள் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.;

Update:2022-11-17 17:27 IST

புதுடெல்லி,

பிரதமர் மோடி நவம்பர் 19 அன்று அருணாச்சலத்திற்கும் உ.பி.க்கும் விஜயம் செய்கிறார். அருணாச்சல பிரதேசம் செல்லும் பிரதமர் மோடி இட்டா நகரில் ரூ640 கோடி மதிப்பில் 690 ஏக்கர் பரப்பளவில் முதல் பசுமை வழி விமான நிலையத்தையும் திறந்து வைக்கிறார். மற்றும் 600 மெகாவாட் கமெங் நீர் மின் நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அதன்பிறகு உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசியில் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சியை மதியம் 2 மணிக்கு துவக்கி வைக்கிறார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்