ஓடும் ரெயிலில் கணவனுக்கு திடீர் நெஞ்சுவலி... வாயோடு வாய் வைத்து காப்பாற்றிய மனைவி..!

உத்தரப்பிரதேசத்தில், 70 வயது முதியவருக்கு ரெயிலில் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால், அவரது மனைவி சிபிஆர் முதலுதவி அளித்து காப்பாற்றினார்.;

Update:2022-10-02 10:53 IST

மதுரா,

டெல்லியில் இருந்து கோழிக்கோடு சென்ற ரெயிலில் கேசவன், தயா எனற் தம்பதி பயணம் செய்தனர். ரெயில் உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுரா அருகே சென்ற போது, கனவர் கேசவனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, அவரது மனைவி தயா அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் வந்த ரெயில்வே போலீசார் ரெயிலை நிறுத்தி மதுரா ரெயில் நிலையத்தில் கேசவனை கீழே இறக்கினர். அதையடுத்து 10 நிமிடம் சிபிஆர் முதலுதவி செய்ய போலீசார் அறிவுறுத்தினர்.

அதன்படி, கணவர் கேசவன் வாயோடு வாய் வைத்து தயா சிகிச்சை அளித்தார். இதையடுத்து கேசவன் சீராக மூச்சு விட்டார். அதையடுத்து அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிபிஆர் செய்ய அறிவுறுத்தி தனது கணவரை காப்பாற்றிய போலீசாருக்கு மனைவி தயா நன்றி தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்