தபால்காரரை தாக்கிய வழக்கில் வாலிபருக்கு 10 மாதம் சிறை தண்டனை; மங்களூரு கோா்ட்டு தீர்ப்பு

தபால்காரரை தாக்கிய வழக்கில் வாலிபருக்கு 10 மாதம் சிறை தண்டனை விதித்து மங்களூரு கோா்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

Update: 2022-09-30 18:45 GMT

மங்களூரு;


தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு தாலுகா பர்கி போலீஸ் எல்லைக்குட்பட்ட பேலார் பகுதியை சேர்ந்தவர் மணிஷ். இவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ந்தேதி கடிதம் ஒன்று வந்துள்ளது. இந்த கடிதத்தை ெகாடுப்பதற்காக தபால்காரர் தினேஷ் என்பவர் சென்றார். அப்போது கடிதம் கொடு்ப்பதில் தினேசுக்கும், மணிசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த மணிஷ், தினேசை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. மேலும் தினேசின் மோட்டார் சைக்கிளையும் மணிஷ் சேதப்படுத்தி உள்ளார். இதில் தினேஷ் படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிசை கைது செய்தனர். மேலும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை மங்களூரு மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த நிைலயில் அந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி பூஜாஸ்ரீ தீர்ப்பு வழங்கினார். அதில் மணீஷ் மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 10 மாதம் சிறைத்தண்டனையும், ரூ.2,500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்