பொய் பிரச்சாரம், தவறான தகவல்களால் இந்தியா தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகிறது - பிரதமர் மோடி
நாட்டின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் சக்திகளின் முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும் என மோடி தெரிவித்தார்.;
Image Courtesy : ANI
புதுடெல்லி,
டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:-
உலக அரங்கில் இந்தியா தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ள நிலையில், தவறான தகவல்,மற்றும் பொய்யான விளம்பரம் போன்றவற்றின் மூலம் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெறுகின்றன. நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி, இந்தியாவின் நலன்களுக்குக் கேடு விளைவிக்கும் சக்திகள், அவர்களின் ஒவ்வொரு முயற்சியிலும் முறியடிக்கப்பட வேண்டும்.
தற்சார்பு இந்தியாவுக்கான 'முழு அரசாங்க' அணுகுமுறையுடன் நாம் முன்னேறி வருகிறோம். நமது நாட்டின் தன்னம்பிக்கைக்கு சவால் விடும் சக்திகளுக்கு எதிரான நமது போரையும் நாம் தீவிரப்படுத்த வேண்டும். எனவே, ஒவ்வொரு நாட்டின் ஒவ்வொரு மக்களும் அதைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.
இவ்வாறு மோடி பேசினார்.