"ஜிப்மரில் மருந்துகள் தட்டுப்பாடு நிலவியது தவறு தான்..." ஒப்புக் கொண்ட கவர்னர் தமிழிசை

ஜிம்பர் மருத்துவமனையில் பாரசிட்டமல் மாத்திரை இல்லாதது தவறு தான் என்று அம்மாநில துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-23 10:56 GMT

புதுச்சேரி,

மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில், புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் இருந்து நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உட்புற மற்றுக் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.

தற்போது மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள . மருந்துகள் தட்டுப்பாட்டால், மாத்திரைகளை வெளியில் வாங்கிக் கொள்ளுமாறு நோயாளிக்கு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதனால், அவதியுறும் நோயாளிகள், மருத்துவமனையில் போதுமான மருந்துகள் இருப்பு வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், ஜிப்மர் மருத்துவமனையில் பாரசிட்டமல் மாத்திரை இல்லையென்று செய்தியாளர்கள் குற்றம் சாட்டிய நிலையில், முதலில் அதை மறுத்த புதுவை துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், பிறகு மருத்துவரை அழைத்து கேட்டு விட்டு "பாரசிட்டமல் கூட இல்லாதது தவறு தான்" என்று தெரிவித்தார்.

மேலும், தற்போது மருந்துகள் அவசரகால கொள்முதல் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்