மேற்கு வங்காளத்தில் வாக்குப்பதிவு: திரிணாமுல் காங்- பா.ஜ.க. இடையே மோதல்

இரு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்தார்.

Update: 2024-04-19 06:34 GMT

கொல்கத்தா,

நாடு முழுவதும் முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது. மக்கள் காலை முதலே தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், மேற்கு வங்காளத்தில் வாக்குப்பதிவின் போது ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே மோதல் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. கூச் பெஹார் நகருக்கு அருகிலுள்ள சந்த்மாரியில் இரு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்தார். கல் வீச்சு தாக்குதலும் நடந்ததாக கூறப்படுகிறது.

வாக்காளர்களை மிரட்டுவதாகவும், வாக்குச் சாவடிகளுக்கு வரவிடாமல் தடுப்பதாகவும், பூத் ஏஜெண்டுகளைத் தாக்கியதாகவும் இரு கட்சிகளை சேர்ந்தவர்களும் தனித்தனியாக குற்றம் சாட்டியுள்ளனர். இதன் காரணமாக டூபங்கஞ்ச் மற்றும் டப்கிராம்-புல்பாரி போன்ற பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.  

Tags:    

மேலும் செய்திகள்