நில அபகரிப்பு வழக்கு: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி
நில அபகரிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து முக அழகிரி மேல் முறையீடு செய்தார்.;
டெல்லி,
மதுரை சிவரக்கோட்டையில் கோவிலுக்குச் சொந்தமான 4 சென்ட் இடத்தை அபகரித்ததாக கூறி முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி உள்பட 7 பேர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து மு.க. அழகிரி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், மு.க. அழகிரியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. விசாரணைக் கோர்ட்டில் உள்ள வழக்கை நீதிபதி ஏன் எதிர்கொள்ளக் கூடாது எனவும் அழகிரி தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.