காஷ்மீர் ஐகோர்ட்டில் பாஸ்போர்ட் நிபந்தனையை எதிர்த்து மெகபூபா முப்தி மகள் மேல்முறையீடு

காஷ்மீர் ஐகோர்ட்டில் பாஸ்போர்ட் நிபந்தனையை எதிர்த்து மெகபூபா முப்தி மகள் மேல்முறையீடு செய்தார்.

Update: 2023-06-19 20:23 GMT

கோப்புப்படம்

ஸ்ரீநகர்,

காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தியின் மகள் இல்டிஜா முப்தி. இவரது பாஸ்போர்ட், கடந்த ஜனவரி 2-ந் தேதியுடன் முடிவடைய இருந்ததால், கடந்த ஆண்டு ஜூன் மாதம், புதிய பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்தார்.

போலீஸ் அறிக்கை எதிராக இருந்ததால், பாஸ்போர்ட் வழங்கப்படவில்லை. அதனால், காஷ்மீர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஐக்கிய அரபு அமீரகத்தில் படிக்க செல்ல வேண்டி இருப்பதாக அவர் கூறியிருந்தார். அவருக்கு பாஸ்போர்ட் வழங்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் அவருக்கு புதிய பாஸ்போர்ட் வழங்கப்பட்டது.

ஆனால், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மட்டும் செல்லும்வகையிலும், 2 ஆண்டுகளுக்கு மட்டும் செல்லுபடி ஆகக்கூடியவகையிலும் அந்த பாஸ்போர்ட் இருந்தது.

இந்நிலையில், இந்த நிபந்தனைகளை எதிர்த்து காஷ்மீர் ஐகோர்ட்டில் இல்டிஜா முப்தி மேல்முறையீடு செய்துள்ளார். குறிப்பிட்ட நாடு, 2 ஆண்டு கால அளவு என்ற நிபந்தனைகள் இல்லாமல், 10 ஆண்டுகள் செல்லும்வகையில் பாஸ்போர்ட் வழங்குமாறு அவர் கோரியுள்ளார். இதற்கு 2 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு பாஸ்போர்ட் அதிகாரிகளுக்கு காஷ்மீர் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்