ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம்

நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை.;

Update:2023-08-17 10:44 IST

ஜம்மு,

ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 3.6 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக குலுங்கியதால் மக்கள் சற்று அச்சம் அடைந்தனர். அதிகாலையில் திடுக்கிட்டு எழுந்த மக்கள், வீடுகளை விட்டும் சில இடங்களில் வெளியே வந்ததை காண முடிந்தது.  

Tags:    

மேலும் செய்திகள்