மாணவர்களின் புத்தகப்பை எடையை குறைக்க உத்தரவு! மத்திய பிரதேசத்தில் வாரம் ஒருநாள் புத்தகப்பை இல்லாத நாள்!

வாரத்தில் ஒரு நாள் புத்தகப்பை இல்லாத நாளாக கடைப்பிடிக்க மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

Update: 2022-09-03 10:55 GMT

போபால்,

பள்ளி மாணவர்களின் புத்தகப்பை சுமையை குறைக்கும் வகையில், வாரத்தில் ஒரு நாள் மட்டும் புத்தகப்பை இல்லாத நாளாக கடைப்பிடிக்க மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்கும் வகையில், மத்தியப் பிரதேச அரசு புதிய திட்டம் ஒன்றைச் செயல்படுத்த உள்ளது.பள்ளிக் கல்வித் துறை வாயிலாக சுற்றறிக்கை மூலம் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ளது.

அதன்படி 1, 2ஆம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பை 1.6 முதல் 2.2 கிலோ வரையிலான எடையில் இருக்க வேண்டும். 3 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பை எடை 1.7 முதல் 2.5 கிலோ வரை இருக்கலாம்.

6 மற்றும் 7ஆம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பை 2 கிலோ முதல் 3 கிலோ வரை இருக்கலாம். எட்டாம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பை 2.5 கிலோ முதல் 4 கிலோ வரை இருக்கலாம். 9, 10 ஆம் வகுப்பு மாணவர்களின் பை 2.5 கிலோ முதல் 4.5 கிலோ வரை இருக்கலாம்.

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் புத்தகப் பையின் எடையானது அந்தந்த பள்ளி நிர்வாகத்தினரால் மாணவர்கள் தேர்வு செய்யும் பாடப்பிரிவை பொருத்து அமையும். இது மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்