ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட குமாரசாமியை நேரில் சந்தித்த நிர்மலானந்தநாத சுவாமி

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2023-04-23 19:01 GMT

Image Courtacy: ANI

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி முன்னாள் முதல்-மந்திரியும், ஜனதா தளம்(எஸ்) கட்சி மூத்த தலைவருமான குமாரசாமி தீவிரமாக சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டு வந்தார். வேட்பாளர்களை இறுதி செய்வது, சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொள்வது, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவது என்று அவர் பரபரப்பாக இருந்தார்.

இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவரை பெங்களூருவில் உள்ள மணிப்பால் ஆஸ்பத்திாியில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள குமாரசாமி, 'சட்டசபை தேர்தலையொட்டி நான் கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தேன். அதனால் உடல் சோர்வு ஏற்பட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதனால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். ஓய்வுக்கு பிறகு நான் மீண்டும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளேன். அதனால் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் பயப்பட தேவை இல்லை' என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்-மந்திரி எச்.டி. குமாரசாமியை நிர்மலானந்தநாத சுவாமி நேரில் சென்று சந்தித்து உடல்நிலை குறித்து கேட்டறிந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்