நிதிஷ்குமாரின் முடிவு ஜனநாயகத்திற்கு நல்லதல்ல... அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி

நிதிஷ் குமார் இந்தியா கூட்டணியில் இருந்து விலகியிருக்கக்கூடாது என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

Update: 2024-01-29 13:20 GMT

புதுடெல்லி,

பீகார் அரசியல் குறித்து கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், இந்தியா கூட்டணியில் இருந்து விலகிய  நிதிஷ் குமார், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் கூட்டணியில் இருந்தும் விலகி தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

இதனை தொடர்ந்து, பாஜக ஆதரவுடன் மீண்டும் பீகாரின் முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் பதவியேற்றுக்கொண்டார். அவர் 9வது முறையாக முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ளார். நிதிஷ் குமார் எடுத்த இந்த திடீர் முடிவை காங்கிரஸ் உள்பட இந்தியா கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

இந்த நிலையில், நிதிஷ் குமரின் இந்த முடிவு குறித்து டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், "நிதிஷ் குமார் இந்தியா கூட்டணியில் இருந்து விலகியிருக்கக்கூடாது. அவர் செய்தது தவறு என்று நினைக்கிறேன். நிதிஷ் குமாரின் இத்தகைய நடத்தை ஜனநாயகத்திற்கு நல்லதல்ல." என்றார்.  

Tags:    

மேலும் செய்திகள்