எதிர்க்கட்சிகளின் ஆட்சியை கவிழ்ப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது; குமாரசாமி பேட்டி

எதிர்க்கட்சிகளின் ஆட்சியை கவிழ்ப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-24 21:24 GMT

பெங்களூரு:

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ராமநகரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பா.ஜனதா ஜனநாயகத்தை அழிக்கிறது. தன்னாட்சி அதிகாரத்துடன் விசாரணை அமைப்புகள் எவ்வாறு செயல்படுகிறது என்பது மக்களுக்கு தெரியும். ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை தொல்லை கொடுப்பதாக நான் கூறினேன். இதற்காக காங்கிரஸ் மீது நான் மென்மையான போக்கை பின்பற்றுவதாக கூறுவது சரியல்ல. என் கழுத்தை அறுத்ததே காங்கிரஸ் தான். நான் எப்படி அக்கட்சி மீது மென்மையான போக்கை பின்பற்ற முடியும். பா.ஜனதாவை மென்மையாக அணுகும் பேச்சுக்கே இடமில்லை. மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி செய்கிறது.

எல்லாம் செய்துவிட்டு தங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்பது போல் அக்கட்சி தலைவர்கள் உள்ளனர். இது பா.ஜனதாவின் ஆட்டம் என்று ஒட்டுமொத்த நாட்டுக்கே தெரியும். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை வலுக்கட்டாயமாக பா.ஜனதா ஆளும் மாநிலங்களுக்கு அழைத்து சென்று வைத்து கொள்கிறார்கள். மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் ஆட்சியை கவிழ்ப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. வரும் நாட்களில் இதற்கெல்லாம் முடிவு வரும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்