அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 10% இட ஒதுக்கீடு: புதுச்சேரி அமைச்சரவை ஒப்புதல்

ஒப்புதலுக்கான கோப்பை துணைநிலை ஆளுநருக்கு அனுப்ப உள்ளதாக புதுச்சேரி முதல் அமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-24 14:21 GMT

புதுச்சேரி,

புதுச்சேரியில் அரசு பள்ளிமாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான அமைச்சரவை கூட்டம், முதல் அமைச்சர் ரங்கசாமி தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமைச்செயலாளர், சுகாதாரத்துறை, கல்வித்துறை செயலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க புதுச்சேரி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனை தொடர்ந்து, ஒப்புதலுக்கான கோப்பை துணைநிலை ஆளுநருக்கு அனுப்ப உள்ளதாக புதுச்சேரி முதல் அமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க புதுச்சேரி அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதன் மூலமாக 37 எம்.பி.பி.எஸ் இடங்கள் மற்றும் 11 பல் மருத்துவ இடங்களில் படிக்க மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்