புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஓட்டுனர்களுக்கு ஊதிய உயர்வு
இந்த ஊதிய உயர்வு 2024, ஜூன் மாதத்திலிருந்து அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.;
கோப்புப்படம்
புதுச்சேரி,
புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஓட்டுனர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, ஒப்பந்த ஓட்டுநர்களின் மாத ஊதியத்தை ரூ.10,804/- லிருந்து, ரூ. 16,796/- ஆகவும், ஒப்பந்த நடத்துனர்களின் மாத ஊதியத்தை ரூ. 10,656/-லிருந்து ரூ.16.585/-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் ந ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
உயர்த்தப்பட்ட இந்த மாத ஊதியத்திற்கான ஆணையினை முதல்-அமைச்சர், போக்குவரத்து ஆணையரும் புதுச்சேரி சாலைப் போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குநருமான, Dr.A.S.சிவக்குமாரிடம் முதல்-அமைச்சர் அலுவலகத்தில் இன்று (04.07.2024) வழங்கினார். இந்த ஊதிய உயர்வு 2024, ஜூன் மாதத்திலிருந்து அமலுக்கு வரும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியின் போது சட்டப்பேரவைத் தலைவர் செல்வம்.R.புதுச்சேரி சாலைப் போக்குவரத்து கழகத்தின் பொது மேலாளர் (நிர்வாகம்) வி.கலியபெருமாள் ஆகியோர் உடனிருந்தார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.