பஞ்சாப்; 6 கிலோ அளவிலான போதைப்பொருள் பறிமுதல்

எல்லை பாதுகாப்பு படையினர் 6 கிலோ அளவிலான போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர்.;

Update:2023-08-30 15:02 IST

image courtesy; ANI

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் எல்லை பகுதியில் போதைப்பொருள் கடத்தபடுவதாக எல்லை பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தோஸ்த்பூர் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் 12 வோல்ட் பேட்டரிக்குள் மறைத்து வைத்து கடத்தப்பட்ட போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் 6 பாக்கெட்டுகளில் 6 கிலோ அளவிலான ஹெராயின் போதைப்பொருளும், ஒரு பாக்கெட்டில் 70 கிராம் அளவிலான அபினும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனை கடத்தி வந்தவர்கள் குறித்து தகவல் எதுவும் கிடைக்கப்படவில்லை. அது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்