வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.3 லட்சம் மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்த மர்மநபர்களை சிவமொக்கா சைபர் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2022-10-20 18:45 GMT

சிவமொக்கா;

சிவமொக்கா மாவட்டம் ஒசநகர் பகுதியில் வாலிபா் ஒருவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலைக்கு செல்ல ஆன்லைனில் தேடினார். அப்போது ஆன்லைனில் இருந்த விளம்பரத்தை பார்த்த அவர், அதில் இருந்த எண்ணுக்கு தொடர்புகொண்டு பேசினார்.

எதிர்முனையில் பேசிய நபர், மொசாம்பிக் நாட்டில் உள்ள போக்குவரத்து நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாகவும், உங்களுக்கு லண்டன், இஸ்ரேல், துபாய் நாடுகளில் வேலை வாங்கி தர முடியும் என்றும் கூறியுள்ளார். மேலும், வேலை வாங்கி கொடுக்க அந்த நிறுவனத்தின் கட்டணம், மருத்துவ கட்டணம், விமான கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது.

இதற்கு ரூ.3 லட்சம் வரை செலவாகும் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த வாலிபர், மர்மநபர் கூறிய வங்கி கணக்கிற்கு பல்வே தவணைகளில் ரூ.2.97 லட்சத்தை செலுத்தி உள்ளார்.

ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் வேலை குறித்து எந்த தகவலும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த வாலிபர், அந்த நபரின் செல்போனுக்கு தொடர்புகொண்டுள்ளார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் வெளிநாட்டில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி ரூ.2.97 லட்சத்தை மர்மநபர் மோசடி செய்ததை அவர் உணர்ந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் சிவமொக்கா சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்