கோவாவில் கணவருடன் சுற்றுலா வந்த இங்கிலாந்து பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை

கோவாவில் கணவருடன் சுற்றுலா வந்த இங்கிலாந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.;

Update:2022-06-07 15:08 IST



பனாஜி,



கோவாவின் வடக்கே அமைந்துள்ள ஆரம்போல் ஸ்வீட் வாட்டர் பீச்சில் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் உள்பட பலர் வருவது வழக்கம். இயற்கை எழில் சார்ந்த இந்த பகுதியில் சுற்றுலாவுக்கான பல சிறப்பம்சங்களை கொண்ட ஏதுவான சூழல் காணப்படுகிறது.

இந்நிலையில், 32 வயதுடைய இங்கிலாந்து பெண் ஒருவர் தனது கணவருடன் இந்த பீச்சுக்கு சுற்றுலா வந்துள்ளார். அந்த பகுதி வழியாக உள்ளூரை சேர்ந்த நபர் ஒருவர் சென்றுள்ளார். பீச்சில் ஓய்வெடுத்து கொண்டிருந்த நடுத்தர வயது கொண்ட அந்த இங்கிலாந்து பெண்ணின் மீது அவரது கவனம் சென்றுள்ளது.

இந்நிலையில், அந்த பெண்ணை அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுபற்றி அந்த பெண், போலீசாரிடம் நேற்று புகார் தெரிவித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், வழக்கில் தொடர்புடைய நபரை கைது செய்து உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்