ஐதராபாத் விமான நிலையத்தில் ரூ.2.29 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

மொத்தம் 3.7 கிலோ கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.;

Update:2023-08-06 22:14 IST

ஐதராபாத்,

ஐதராபாத் விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துபாயில் இருந்து வந்திறங்கிய பயணி ஒருவர் தனது உள்ளாடையில் ரூ.1.18 கோடி மதிப்பிலான 1.924 கிலோ தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.


இதே போல் ஜெட்டா நகரில் இருந்து வந்திறங்கிய இரண்டு பயணிகள் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஸ்பீக்கர், மின்விளக்கு, அயர்ன் பாக்ஸ் மற்றும் ஆசனவாயில் மறைத்து ரூ.1.11 கோடி மதிப்பிலான 1.819 கிலோ தங்கத்தை கடத்தி வந்துள்ளனர். இந்த வழக்குகளில் மொத்தம் ரூ.2.29 கோடி மதிப்பிலான 3.7 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், கைது செய்யப்பட்ட நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

Tags:    

மேலும் செய்திகள்