கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க நடவடிக்கை -குமாரசாமி வலியுறுத்தல்
கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.;
பெங்களூரு:-
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பெஙகளூருவில் சந்தேகப்படும்படியான பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன்னரே அவர்களை கைது செய்த போலீசாரை நான் பாராட்டுகிறேன். இத்தகைய சிக்கலான விஷயங்களில் போலீசார் சிறப்பாக பணியாற்றுகிறார்கள். இந்த விஷயத்தில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சட்டம்-ஒழுங்கை பராமரிக்க அதிக அக்கறை செலுத்த வேண்டும். சமீபகாலமாக சாலைகளிலேயே கொலைகள் நடக்கின்றன. இதனால் பொதுமக்களுக்கு ஒரு விதமான அச்சம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக அரசு இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் மக்கள் நிம்மதியாக வாழும் நிலையை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.