இந்திய ஜனநாயகத்தின் வெற்றி சிலரை காயப்படுத்துகிறது - பிரதமர் மோடி

இந்திய ஜனநாயகத்தின் வெற்றி சிலரை காயப்படுத்துகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.

Update: 2023-03-18 18:41 GMT

டெல்லி,

பிரபல தனியார் ஆங்கில செய்தி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் இந்திய ஜனநாயகம் முறித்து லண்டனில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியை மறைமுகமாக விமர்சித்தார்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறுகையில், நாடு முழுவதும் நம்பிக்கையுடனும், உறுதியுடனும் இருக்கும்போது, உலக அறிவுஜீவிகள் இந்தியாவைப் பற்றி நம்பிக்கையுடன் இருக்கும்போது, அவநம்பிக்கையை பேச்சு, நாட்டை மோசமான வெளிச்சத்தில் காட்டுவது மற்றும் நாட்டின் மன உறுதியைக் காயப்படுத்துவதும் நடைபெறுகிறது.

சில நல்ல விஷயங்கள் நடைபெறும்போது அதில் கரும்புள்ளி வைப்பதும் வழக்கம். அந்த வகையில் பல்வேறு நல்ல விஷயங்கள் நடைபெற்று வரும்போது கரும்புள்ளி வைக்கும் பொறுப்பை சிலர் எடுத்துக்கொள்கின்றனர்.

இந்திய ஜனநாயகம் மற்றும் அதன் அமைப்புகளின் வெற்றி சிலரை காயப்படுத்துகிறது. ஆகையால் தான் இந்திய ஜனநாயகத்தை அவர்கள் தாக்குகின்றனர்' என்றார். இன்று உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது. ஸ்மார்ட் போன் டேட்டா பயன்பாட்டில் முதல் இடத்தில் உள்ளது. மொபைல் போன் உற்பத்தில் 2வது இடத்தில் உள்ளது. புதிய தொழில் துவங்குவதற்கான சூழ்நிலையில் 3வது இடத்தில் உள்ளது' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்