தானே: ரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து - 6 பேர் உயிரிழப்பு

தானேவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

Update: 2024-05-23 12:20 GMT

மும்பை,

மராட்டிய மாநிலம் தானேவில் உள்ள டோம்பிவாலி பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அங்கிருந்த பாய்லர் வெடித்துச் சிதறியது.

இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். சுமார் 15 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த வெடி விபத்தின் தாக்கத்தால் தொழிற்சாலைக்கு அருகே இருந்த கட்டிடங்கள் மற்றும் வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியதாக கூறப்படுகிறது. மேலும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ, அருகில் உள்ள கார் ஷோரூம் உள்பட 2 கட்டிடங்களுக்கு பரவியுள்ளது. இந்த தீ விபத்தில் படுகாயமடைந்தவர்களின் சிகிச்சைக்கு தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மராட்டிய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்