காங்கிரஸ் அரசு மின்கட்டணத்தை உயர்த்தி மக்களை ஏமாற்றி விட்டது முன்னாள் மந்திரி சி.டி.ரவி பேட்டி

காங்கிரஸ் அரசு மின்கட்டணத்தை உயர்த்தி மக்களை ஏமாற்றி விட்டது என முன்னாள் மந்திரி சி.டி.ரவி கூறினார்.

Update: 2023-06-16 18:45 GMT

சிக்கமகளூரு-

சிக்கமகளூருவில் முன்னாள் மந்திரியும், பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளருமான சி.டி.ரவி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு ஏற்கனவே 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கி வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலவச அரிசி வழங்குவதை மத்திய அரசு நிறுத்தி உள்ளது. இந்தநிலையில், காங்கிரஸ் அரசு தேர்தல் அறிக்கையில் கூறிய 10 கிலோ இலவச அரிசி திட்டத்தை நிறைவேற்றாமல் காலதாமதம் செய்து வருகிறது. மேலும் மத்திய அரசின் 10 கிலோ இலவச அரிசி திட்டத்தை மீண்டும் கொண்டு வந்து மாநில அரசு, அரசியல் லாபம் தேட நினைக்கிறது.

மாநில அரசு தேர்தல் அறிக்கையில் கூறிய திட்டங்களை நிறைவேற்றாமல் மத்திய அரசை குற்றம் சாட்டி வருகிறது. 10 கிலோ அரிசி கொடுப்பதாக இருந்தால் மாநில அரசின் நிதியில் இருந்து கொடுக்கட்டும். வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் என கூறி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. ஆனால் அந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்னதாகவே மின்கட்டணத்தை மாநில அரசு உயர்த்தி உள்ளது. இதன் மூலம் மக்களை காங்கிரஸ் அரசு ஏமாற்றி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்