உத்தரபிரதேசத்தில் பரிதாபம்: சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு.!
இந்த சம்பவம் பற்றி தகவல் தெரிந்த போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.;
காசிப்பூர்,
உத்தரபிரதேசம் மாநிலம், காசிப்பூர் மாவட்டத்தில் சக்சேம்ரா கிராமத்தின் அருகே வாரணாசி நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீெரன டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் தாய்- மகள் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் பற்றி தகவல் தெரிந்த போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.