காங்கிரசின் நட்சத்திர பேச்சாளர்கள் யார்-யார்?
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரசின் நட்சத்திர பேச்சாளர்கள் யார்-யார் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.;
பெங்களூரு:-
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி 40 நட்சத்திர பேச்சாளர்கள் அடங்கிய பெயர் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளது. இதில் சமீபத்தில் பா.ஜனதாவை விட்டு விலகி காங்கிரசில் சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர், நடிகை ரம்யா உள்ளிட்டோருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள நட்சத்திர பேச்சாளர்களின் பெயர்கள் வருமாறு:-
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வதேரா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, கே.சி.வேணுகோபால், மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் பி.கே.ஹரிபிரசாத், பிரசார குழு தலைவர் எம்.பி.பட்டீல், முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ்.
முன்னாள் முதுல்-மந்திரி வீரப்பமொய்லி, காங்கிரஸ் செயல் தலைவர்கள் ராமலிங்கரெட்டி, சதீஸ் ஜார்கிகோளி, முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர், டி.கே.சுரேஷ் எம்.பி., சையத் நசீர் உசேன், ஜமீர் அகமதுகான் எம்.எல்.ஏ., முன்னாள் மந்திரி எச்.எம்.ரேவண்ணா, முன்னாள் மந்திரி உமாஸ்ரீ, ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பாகல். இமாசல பிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுக்கு, ப.சிதம்பரம் எம்.பி., பிரித்விராஜ் சவான், அசோக் சவான், சசிதரூர் எம்.பி., ரேவந்த் ரெட்டி, ரமேஷ் சென்னிதலா, பி.வி.சீனிவாஸ், ராஜ் பப்பார், கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன், நடிகை ரம்யா, இம்ரான் பிரதப்கர்தி, கன்னையா குமார், ரூபா சசிதர், நடிகர் சாதுகோகிலா.