ஐதராபாத்தில் தர்ணா நடத்திய ஆந்திர முதல்-மந்திரியின் தங்கை கைது

ஐதராபாத்தில் தர்ணா நடத்திய ஆந்திர முதல்-மந்திரியின் தங்கை கைது செய்யப்பட்டார்.;

Update:2023-03-09 03:21 IST

ஐதராபாத்,

ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.சர்மிளா ஆவார். இவர் தெலுங்கானா மாநிலத்தில், ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி நடத்தி வருகிறார்.

இவர் பெண்கள் தினத்தையொட்டி, மாநிலத்தில் பெண்கள் மீது நடந்து வருகிற தாக்குதல்களைக் கண்டித்து ஐதராபாத் நகரில் டேங்க் பண்ட் பகுதியில் நேற்று தர்ணா போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தார். அவர் அதன்படி, ராணி ருத்ரமா தேவி மற்றும் சக்காளி அய்லம்மா சிலைகளுக்கு மரியாதை செய்து விட்டு தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அழைத்துச்சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்