ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்கா வேட்பு மனு தாக்கல்

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா போட்டியிடுகின்றார்.

Update: 2022-06-27 06:39 GMT

ஐதராபாத்,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ம் தேதியுடன் முடிவடைய உள்ளதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ம் தேதி நடத்தப்பட உள்ளது.

இந்த ஜனாதிபதி தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பழங்குடியின பெண் தலைவர் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா போட்டியிடுகின்றார்.

திரவுபதி முர்மு ஏற்கனவே மனு தாக்கல் செய்துவிட்ட நிலையில், இன்று காலை யஷ்வந்த் சின்கா வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலின் போது காங்கிரஸ் எம்.எபி ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் யாதவ் ஆகியோர் உடன் இருந்தனர். திமுக சார்பில் திருச்சி சிவா எம்.பி, கலந்து கொண்டார். 

Tags:    

மேலும் செய்திகள்