வங்காளதேசத்துடன் நட்பு, அமைதி நிலைக்கவே நாம் விரும்புகிறோம் - பரூக் அப்துல்லா

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா ஆவார்;

Update:2025-12-29 15:55 IST

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா இன்று ஸ்ரீநகரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, புத்தாண்டு கடந்த ஆண்டை விட சிறப்பாக அமைய கடவுளை பிரார்த்திக்கிறேன். நமது கஷ்டங்கள் குறைந்து சுற்றுலா செழிக்கட்டும், அமைதி நிலவி, சகோதரத்துவம் நிலைத்திருக்கட்டும்.

நாம் வங்காளதேசத்துடன் நட்பு தொடரவும், அமைதி நிலைக்கவும், சகோதரத்துவம் வளரவும் விரும்புகிறோம். அங்கு தேர்தல் நடைபெறுகிறது. புதிய அரசு வர உள்ளது. வங்காளதேசத்தின் புதிய அரசு இந்திய அரசுடன் நல்லுறவை பேணும் என நம்புகிறேன்

என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்