கர்நாடகத்தில் 120 தாலுகாக்களை வறட்சி பகுதிகளாக அறிவிக்க வேண்டும் எடியூரப்பா வலியுறுத்தல்

கர்நாடகத்தில் 120 தாலுகாக்களை வறட்சி பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என எடியூரப்பா வலியுறுத்தி உள்ளார்.

Update: 2023-08-25 18:45 GMT

பெங்களூரு-

முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா 'எக்ஸ்' (டுவிட்டர்) பதிவில் கூறி இருப்பதாவது:-

கர்நாடகத்தில் இந்த ஆண்டு போதிய மழை பெய்யவில்லை. சராசரியை விட மிக குறைவான அளவே மழை பெய்துள்ளது. மாநிலத்தில் உள்ள அணைகளும் நிரம்பாமல் உள்ளன. இதனால் பல மாவட்டங்களில் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் பயிர்கள் நாசம் அடைந்துள்ளன. மாநிலத்தில் 120-க்கும் மேற்பட்ட தாலுகாக்களில் கடுமையான வறட்சி நிலவுகிறது.

அந்த 120 தாலுகாக்களையும் வறட்சி பாதித்த பகுதிகளாக அரசு அறிவிக்க வேண்டும். வறட்சி பாதித்த தாலுகாக்களை அறிவிப்பதில் அரசு இனியும் காலதாமதம் செய்ய கூடாது.

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு வறட்சி பாதித்த தாலுகாக்களை அறிவிப்பதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கும் பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் அரசு காலதாமதம் செய்வதை தவிர்த்து விட்டு விவசாயிகளுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வர வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்