மருந்துகள் விலை உயர்வு: பிரதமர் மோடி மீது மல்லிகார்ஜுன கார்கே பாய்ச்சல்

மருந்துகள் விலை உயர்வு தொடர்பாக பிரதமர் மோடி மீது மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2023-04-02 19:15 GMT

புதுடெல்லி,

அத்தியாவசிய மருந்துகள் 12 சதவீதம் விலை உயர்த்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையொட்டி காங்கிரஸ் தலைவர் கார்கே டுவிட்டரில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

பிரதமர் மோடியைச் சாடும் அந்த பதிவில் அவர், "மோடி அவர்களே, நீங்கள் மக்களை ஜேப்படி செய்வதற்கு ஒப்பந்தம் செய்திருக்கிறீர்கள்" என கூறி உள்ளார்.

பிரதமர் மோடி தன் புகழைக் கெடுப்பதற்காக சிலர் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள் என நேற்று முன்தினம் குற்றம்சாட்டி இருந்ததை நினைவுபடுத்தும் விதமாக இந்த பதிவு அமைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்