லஞ்ச ஒழிப்பு போலீசார் என கூறி அரசு அதிகாரி, மனைவியை தாக்கி ரூ.35 லட்சம் பறித்த 11 பேர் கைது; துப்பாக்கி பறிமுதல்

லஞ்ச ஒழிப்பு போலீசார் என கூறி ஓய்வுபெற்ற அரசு அதிகாரி, மனைவியை தாக்கி ரூ.35 லட்சம் நகை, பணத்தை பறித்து சென்ற 11 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-08-01 18:45 GMT

மும்பை, 

லஞ்ச ஒழிப்பு போலீசார் என கூறி ஓய்வுபெற்ற அரசு அதிகாரி, மனைவியை தாக்கி ரூ.35 லட்சம் நகை, பணத்தை பறித்து சென்ற 11 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.

நகை, பணம் கொள்ளை

நவிமும்பை ஐரோலி பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி தனது மனைவியுடன் வசித்து வருகிறார். கடந்த 21-ந் தேதி கும்பல் அவரது வீட்டிற்குள் புகுந்தனர். தாங்கள் லஞ்ச ஒழிப்பு போலீசார் என கூறிக்கொண்டு வீட்டில் சோதனை போட வேண்டும் என்று தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரியை கும்பல் பிடித்து சராமாரியாக தாக்கியது. இதனை தடுக்க வந்த மனைவியையும் தாக்கி விட்டு அங்கிருந்த நகை, பணத்தை கொள்ளை அடித்தனர்.

11 பேர் கைது

இதன்பின்னர் அந்த கும்பலினர் வந்த வாகனத்தில் ஏறி தப்பி சென்று விட்டனர். இது பற்றி அரசு அதிகாரி ராபேலே போலீசில் புகார் அளித்தார். போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். கொள்ளைப்போன நகை, பணத்தின் மதிப்பு ரூ.34 லட்சத்து 85 ஆயிரம் ஆகும். போலீசார் கொள்ளை கும்பலை தனிப்படை அமைத்து தேடிவந்தனர். புனே, தானே மற்றும் மும்பையில் கடந்த ஒரு வாரமாக நடத்திய தேடுதல் வேட்டையில் 11 பேர் சிக்கினர். இவர்களிடம் இருந்து ரூ.13 லட்சம் மதிப்புள்ள பொருட்கள், கொள்ளை அடிக்க பயன்படுத்திய கார்கள் மற்றும் துப்பாக்கி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்