தானேயில் போதைப்பொருள் விற்க முயன்ற 2 பேர் கைது - பீகாரை சேர்ந்தவர்கள்

தானேயில் போதைப்பொருள் விற்க முயன்ற பீகாரை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்

Update: 2023-08-26 19:45 GMT

தானே, 

தானே கிழக்கு பகுதிக்கு போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து போலீசார் கோப்ரி பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர். அப்போது அங்குள்ள பள்ளி ஒன்றின் அருகே சந்தேகப்படும்படி 2 பேர் நடமாடியதை போலீசார் கண்டனர். போலீசார் அவர்களை பிடித்து அவர்கள் வைத்திருந்த உடைமைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அதில் 2 கிலோ 600 கிராம் எடையுள்ள சரஸ் என்ற போதைப்பொருள் மற்றும் நேபாள நாட்டின் கரன்சியை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். விசாரணையில் பிடிபட்டவர்கள் பீகார் மாநிலம் சீதாமார்கி பகுதியை சேர்ந்த பிரசாந்த் குமார் சிங் (வயது27) மற்றும் பிரேம்சங்கர் தாக்குர் (23) என்பதும், அவர்கள் வெளிமாநிலத்தில் இருந்து அந்த போதைபொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வருகிற 29-ந்தேதி வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்